புதுச்சேரி: நான்கு பிராந்தியங்களில் 60 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளேன் என, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
ரெட்டியார்பாளையத்தில், லட்சிய ஜனநாயக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், கட்சியின் மாநில நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

பின், அவர், கூறியதாவது:
லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர்கள், மண்டல பொதுச் செயலாளர்கள் செயலாளர்களை நியமித்து, அறிமுகம் செய்கிறோம். ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு 60 நாட்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் பகுதிகளில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
இந்த நடை பயணத்தில் மக்களை சந்தித்து, அவர்களுடன் தங்கி பிரசாரம் செய்ய உள்ளோம். புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி பெயரில் பாரதியார் நீக்கப்பட்டது வருத்தத்திற்குரியது. எப்போதும் பூர்வீகத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. பாரதியார் பெயர் நீக்கத்திற்காக போராட்டம் நடத்தி குரல் கொடுப்போம்.