மகளிருக்கான JCM-ன் வாக்குறுதிகள்
பெண்கள் வலிமை பெறும் போது, புதுச்சேரி வளம் பெறும்!
பெண்களுக்காக, லட்சிய ஜனநாயக கட்சியின் தலலவர் JCM என்னும் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், முன் வைக்கும் 6 மிக முக்கியமான தீர்மானங்கள்:
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பெண்கள் பாதுகாப்பு திட்டம்
பெண்கள் வீட்டிலும், வேலைத்தளத்திலும், பொதுவிடங்களிலும் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.
112 என்ற அவசர உதவி எண் மூலம், இடத்தைக் கண்டறிந்து உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
பெண்களின் அவசர அழைப்புக்கு 7 நிமிடங்களில் காவல் துறை உதவி
பள்ளி, கல்லூரி, தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் 50 SVU இருசக்கர வாகனங்களும் கொண்ட மகளிர் காவல் ரோந்து தனிச்சிறப்புப் படை உருவாக்கப்படும்.
அனைத்து பொது சாலைகளிலும் 100% முழுமையான சிசிடிவி கண்காணிப்பு. அடிப்படையில் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அனுப்பப்படும்.
சந்தை, கடற்கரைப் பகுதிகளில் அவசர அழைப்பு பட்டன்கள் அமைக்கப்படும். இதை அழுத்தினால் சைரன் ஒலித்து, பாதுகாப்புக்காக கதவு தானாக பூட்டப்பட்டு, காவல் துறையுடன் நேரடியாக வீடியோ காலில் பேசலாம்.
பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பாதுக்காக்க இலவச சட்ட உதவி மையம் அமைக்கப்படும் .
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் வகையில், 2 தனிப்பட்ட விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
ஆட்டோ, டாக்ஸிகளில் GPS அவசர பட்டன்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிப்பு வசதி உறுதிசெய்யப்படும்.
இணைய வழித்தொல்லை, மார்ஃபிங் படங்களைக் கையாள சிறப்புப் பிரிவு அமைக்கப்படும்.
பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு சான்றிதழ் முறை அமல், மேலும் அங்கு 24 மணிநேரமும் பாதுகாப்புக் காவலர்கள் மூலம் பாதுகாப்பு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
தர்மாம்பாள் பெண்கள் வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டம்
வறுமைக் கோட்டிற்குக்கீழ், உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.50,000 உதவி
திறமையான கல்லூரி மாணவிகளுக்கு (GPA 9.5-க்கு மேல்) இலவச மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 60% வாகன மானியம் வழங்கப்படும்.
பெண் தொழில்முனைவோருக்கு, 'ஸ்மார்ட் சகோதரி திட்டம் மூலம் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும்.
'வித்யா' இலவச மடிக்கணினி திட்டம் மூலம் அனைத்து கல்லூரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி தரப்படும்.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மற்றும் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு இலவச மின்சார தையல் இயந்திரம் வழங்கப்படும்.
தொழில் தொடங்கப் பெண்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு, 50% மானியத்துடன் கடன் அளிக்கப்படும்.
அரசு ஒப்பந்தங்களில் பெண்களுக்கு முன்பணம் விலக்கு அளிக்கப்படும்.
புதுவை சுய உதவிக்குழு தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும். மேலும் SHE-MARTS அமைக்கப்பட்டு சுய உதவிக்குழு தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும்.
சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் தரப்படும்.
பெண் தொழில்முனைவோருக்கு போன்ற வணிக உரிமங்களை துரிதமாக செயல்படுத்த தனித்துவமான ஒற்றைச்சாளர வசதி அமைக்கப்படும்.
முன்னேறு வா தோழி திட்டத்தின் மூலம், பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க 10% மானியம் வழங்கப்படும். மேலும் பேருந்து நிறுத்தங்களில் பிங்க் ஸ்டாண்டுகள் அமைக்கப்படும்.
முத்துலட்சுமி ரெட்டி மகளிர் சுகாதார திட்டம்
அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20,000 வழங்கப்படும்.
தாய் மற்றும் குழந்தை நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.35,000 நிதி உதவி மற்றும் JCM ஊட்டச்சத்து கிட் வழங்கப்படும்.
மனச்சோர்வு, குடும்ப அழுத்தங்களுக்கு ஆட்படும் பெண்களை மீட்டெடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் இலவச ரகசிய ஆலோசனை தரும் மனநல ஆலோசனை மையம் செயல்படுத்தப்படும்.
மணியம்மை பெண்கள் சுய மரியாதைத் திட்டம்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மணப்பெண்களுக்கு 1 லட்சம் நிதி மற்றும் 10கிராம் தங்கம் வழங்கப்படும்.
பெண்கள் கடன் சுமையில் சிக்காமல் மரியாதையுடன் வாழ கைம்பெண்கள், திருமணமாகாத பெண்கள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் தரப்படும்.
கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா அவசரக்கடன் வழங்கப்படும்.
அவ்வையார் பெண்கள் ஆளட்டும் திட்டம்
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இருக்கைகள் சட்டப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்கள் மற்றும் குடும்பங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை கையாள, அரசின் கீழ் பெண்கள் ஆலோசனை பேரவைகள் அமைக்கப்படும்.
பெண் தலைவர்களாக உருவாக விரும்புவோருக்கு, அரசின் சிறப்பு அகாடமி மூலம் ஆட்சி நிர்வாகத்தில் டிப்ளமோ பயிற்சி வழங்கப்படும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பெண்கள் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
இயக்குநர், செயலர் நிலை எனப்படும் அரசு உயர் நிர்வாகப் பதவிகளில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33% இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்படும்.
பெண் பட்டதாரிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நேரடியாக பணியாற்றும் வகையில், ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய பயிற்சி தரப்படும்
அனைத்து கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர் குழுக்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
சரசுவதி சுப்பையா மகளிர் உரிமை நிலை நாட்டும் திட்டம்
இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தரப்படும்.
பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் மற்றும் பயிற்சி பெறும் வகையில் அதற்கான செலவுகளை, அரசே ஏற்கும்.
புதுச்சேரி அரசு இயக்கம் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.
கல்வி நிலையங்கள் மற்றும் பொது விடயங்களில் இலவச சானிட்டரி நாப்கின் PINK ATM வசதி ஏற்படுத்தப்படும்.
கண்ணகி சூரிய ஆற்றல் திட்டம் மூலம், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் தலைமைத் தாங்கும் குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் வசதி செய்து தரப்படும்.
வாக்குறுதிகள் பெண்களின் பாதுகாப்பு சுய மரியாதையை முன்னெடுக்கிறது.
2026-ல் பொதுமக்களின் நம்பிக்கையுடன் புதுச்சேரியில் அமைய இருக்கும் லட்சிய ஜனநாயக கட்சியின் புதிய ஆட்சியில், புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, எனது சொந்த பணத்தில் இருந்து ரூ.100 கோடி ஒதுக்கு மக்கள் பணி செய்யப்படும்.