புதுச்சேரி: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. இன்று புதுச்சேரியில் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ எனும் புதிய கட்சி உருவாகியுள்ளது. லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இக்கட்சியை தொடங்கியுள்ளார்.

புதுச்சேரியில் தற்போது பாஜக-என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இந்த கூட்டணிக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கவே இக்கட்சி உதயமாவதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஓராண்டுகளாக புதுச்சேரியில் ஜே சி எம் என்ற அறக்கட்டளையின் நடத்தி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்திருந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தற்போது அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். காமராஜர் நகர் முதலியார் பேட்டை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் இந்த அறக்கட்டளை சார்பில் மதிய உணவுகளை ஜோஸ் சார்லஸ் வழங்கி வருகிறார். தற்போது இந்த அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாறியிருக்கிறது. கட்சியின் கொடியை வங்காள விரிகுடா கடலில் ஜோஸ் சார்லஸ் அறிமுகப்படுத்தியுள்ளார் துறைமுகத்தில் உள்ள கப்பலில் வந்து, ஏராளமான தொண்டர்களுடன் அவர் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று பாண்டி மெரினா மைதானத்தில் இதற்கான அறிமுக விழாவும், துவக்க விழாவும் நடக்கிறது. இந்த விழாவில் சார்லஸ் உரையாற்றுகிறார்.